ராமநாதபுரம் ரெணபலி முருகன் கோயில் சஷ்டி துவக்கம்
ADDED :2227 days ago
ராமநாதபுரம்: பெருவயல் கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான சிவசுப்பிர மணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் உள்ளது.
கந்தசஷ்டி விழாவையொட்டி நாளை மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜையுடன் அபிஷேக ஆராதனைகள், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து மூன்று நாட்களும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உள்பிரகாரம் உலா நடக்கிறது.
நவ.,2 ல் சூரசம்ஹாரம் நிகழ்வும், நவ.,3ல் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணமும் நடகிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் செய்துள்ளது.