உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெரியநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரத்தில் தீபாவளி பண்டிகை யையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூதேவி, ஸ்ரீ தேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழைய புதுாரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெருமாள், கோவிலை சுற்றி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜோதிபுரம் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள், பாலமலை ரங்கநாதர் கோவில், இடிகரை பள்ளி கொண்ட ரங்கநாதர் கோவில் களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !