உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் ஜீவசமாதியடைந்த சித்தருக்கு அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவி லில் பல ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தவர் பரங்கிப்பேட்டையார் என்கிற குழந்தைவேல் சுவாமிகள்.இவர் அக்கோவிலில் உள்ள பிரணவ தீர்த்தத்தில் முக்தியடைந்து ஜல சமாதி அடைந்தார்.

இவருக்கு மலையின் தென்மேற்கு பகுதியில் ஜீவசமாதி அமைக்கப்பட்டது. அவரது நினை வாக ஜீவசமாதியில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று அமாவாசையை முன்னிட்டு மதியம் 1:00 மணிக்கு ஜீவ சமாதியடைந்த இடத்தின் மேல் உள்ள பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் உபயதாரர் இதயநிதி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !