உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா துவக்கம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா துவக்கம்

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாயையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகமும், காலை 5:30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சியும் நடந்தன. காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது.மாலை 4:30 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் நடந்தது. அங்கிருந்து தங்கதேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் வலம் வந்து கோயிலை சேர்ந்தார். விரதம் துவக்கினர்விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் துவங்கினர். மேலும் கோயில் வளாகத்தில் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகையில் பக்தர்கள் தங்கியுள்ளனர்.முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 2- மாலை 4:30 க்கு நடக்கிறது. நவ.,3ல் திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !