உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி கேதார கவுரி விரதத்தில் கோவில்களில் பெண்கள் வழிபாடு

தர்மபுரி கேதார கவுரி விரதத்தில் கோவில்களில் பெண்கள் வழிபாடு

தர்மபுரி: தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் உடனாகிய கல்யாண  காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி அமாவாசையான நேற்று (அக்., 28ல்), பெண்கள் கேதார கவுரி விரதம் கடைபிடித்தனர்.

தங்களது கணவர் நீண்ட ஆயுளுடனும், ஒற்றுமையுடன் வாழ வேண்டி, சுமங்கலி பெண்கள், ஐப்பசி அமாவாசையன்று கவுரி அம்மனுக்கு விரதம் கடைபிடிப்பது வழக்கம். ஐப்பசி அமா வாசையான நேற்று (அக்., 28ல்), தர்மபுரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுமங்கலி பெண்கள், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் உடனாகிய கல்யாண காமாட்சியம்மன் கோவிலில், கேதார கவுரி விரத்தை கடைபிடித்தனர்.  

இதில், மல்லிகார்ஜூனேஸ்வரர், கவுரியின் வடிவாக கல்யாண காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில்,  ஸ்வாமிக்கு அதிரசம், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, நோன்பு  கயிறு படைக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று, பிடமனேரி மாரியம்மன் கோவில், குமாரசாமிபேட்டை  சிவசுப் பிரமணி சுவாமி கோவிலிலும், கேதார கவுரி விரத பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !