உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி விழா

மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி விழா

மயிலம் : மயிலத்தில் உள்ள வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி  கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று (அக்., 28ல்) யாகசாலை வழிபாடு மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அதனையொட்டி, நேற்று (அக்., 28ல்) காலை 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடந்தது. நேற்று முதல் பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து வருகின்றனர்.வரும் நவம்பர் 2ம் தேதி கந்தசஷ்டி 6ம் நாள் விழாவில் இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சன்னதியில் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி சூரசம்ஹாரமும் நடக்கிறது.

பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கிரிவலம்  நடக்கிறது.விழா ஏற்பாடு களை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம்  சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து  வருகின்றனர்.திருக்கோவிலுார்கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில்,  கந்தசஷ்டி விழா நேற்று காலை துவங்கியது. 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு  விசேஷ அபிஷேகம், அலங்காரம், 9:00 மணிக்கு முருகப்பெருமான் சன்னதியில்  அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வள்ளி தேவசேனா முருகப் பெருமானுக்கு  விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு ஸ்கந்த ஹோமம், மகாபூர்ணாகுதி, சுவாமிக்கு  லட்சார்ச்சனை, உற்சவர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.தொடர்ந்து 7 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவின் முக்கிய  நிகழ்ச்சியாக வரும் 2ம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம், 3ம் தேதி திருக்கல்யாண  வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !