பாசமலர் திருவிழா
ADDED :2212 days ago
வடமாநிலங்களில் தீபாவளி பாசமலர் திருவிழாவாக நடக்கிறது. இதில் எமனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எமனின் தங்கை யமுனை(நதி). அவளுக்கு தீபாவளியன்று அண்ணன் பரிசளிக்க வருவதாகவும், அதற்கு நன்றியாக யமுனை விருந்து படைப்பதாகவும் சொல்வர்.
இதனடிப்படையில் வடமாநிலங்களில் சகோதரிகளுக்கு, சகோதரர்கள் பரிசு அளிப்பர், நன்றிக்கடனாக, சகோதரிகள் சகோதரர்களுக்கு விருந்து வைப்பர். இரவில் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவர். தீபம் அணையாமல் நீண்டநேரம் மிதந்தால் ஆண்டு முழுவதும் சுபிட்சமாக இருக்கும் என நம்புகின்றனர்.