உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரசம்ஹார திருவிழா சிறப்பு அபிஷேக பூஜை

சூரசம்ஹார திருவிழா சிறப்பு அபிஷேக பூஜை

உடுமலை:சூரசம்ஹார திருவிழாவையொட்டி, சுப்பிரமணியர் சுவாமிக்கு, நாள்தோறும், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹார திருவிழா நேற்றுமுன்தினம் பாலிகை இடுதல், காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று கோவில் வளாகத்திலுள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில், யாகசாலை வேள்வி பூஜை நடந்தது.சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. மாலை, உற்சவருக்கு, நடந்த சிறப்பு அபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !