தேனி கோயில்களில் குருபெயர்ச்சி விழா
தேனி : குருபெயர்ச்சி முன்னட்டு தேனி அரண்மனைப்புதுார் வேதபுரீ வித்யாபீடத்தில் மூலவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூைஜ நடந்தது. இதில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பெரியகுளம்: பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில் குருப்பெயர்ச்சி விழாவில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.நேற்று காலை 3:49 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி கோயிலில் மகா கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் பூஜைகள், குருபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.
நற்பலன் பெறும் ராசிகளான மஷேம்,மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம், பரிகார ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகியவற்றுக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் தங்களது பெயர் ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு நடந்த பூஜையில் பங்கேற்றனர். தட்சிணாமூர்த்தி படத்துடன் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி, காளியம்மன் காட்சியளித்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ குருதட்சிணாமூர்தி சேவா சங்கம் கவுரவ ஆலோசகர் சி.சரவணன், நிர்வாகிகள் செய்திருந்தனர். பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.