திருவல்லீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி
ADDED :2202 days ago
அம்பத்துார்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திருவல்லீஸ்வரர் கோவிலில், ஏராளமானோர் பரிகார பூஜையில் பங்கேற்றனர்.சென்னை, கொரட்டூர், பாடியில் உள்ள திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி பரிகார பூஜைகள், நேற்று அதிகாலை முதல் நடந்தன.அதில், குரு பகவானுக்கு, லட்சார்ச்சனை, பரிகார ஹோமம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன.சென்னை சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பரிகார பூஜைகளில் பங்கேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு மற்றும் மருத்துவ குழு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.