உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு பெயர்ச்சி பரிகார மஹா யாகம்

குரு பெயர்ச்சி பரிகார மஹா யாகம்

நவகிரகங்களில் ஒருவரான, குரு பகவான், விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு, நேற்று, அதிகாலை, 3:42 மணிக்கு, பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, திருவள்ளூர், பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில் பரிகார மஹா யாகம், 108 ஹோம திரவியங்களைக் கொண்டு நடந்தது.

நள்ளிரவு, 2.30 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, அதிகாலை, பாலாபிஷேகம், அதை தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது.திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகர், காரியசித்தி விநாயகர் கோவில், தீர்த்தீஸ்வரர் கோவில், அருணாசலேஸ்வர கோவில், திருப்பாச்சூர்வாசீஸ்வரர் கோவில், மணவாள நகர் மங்களீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில், குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி, அகரத்தில் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இங்கு, குருவிற்கு தனி சன்னிதி உள்ளது. செங்கல்பட்டு, ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருக்கச்சூர் அஞ்சனாட்சி சமேத தியாகராஜ கோவில், சிங்கபெருமாள் கோவில் குளக்கரையில் உள்ள, நவக்கிரஹ கோவில், மதுராந்தகம், கடமலைபுத்துார், குரு பகவான் யோக தட்சணாமூர்த்தி கோவிலில், குரு பெயர்ச்சி விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. குரு கோவிலில் கவர்னர் தரிசனம்பூங்கா நகர், தட்சிணாமூர்த்தி பீடத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று காலை, சுவாமி தரிசனம் செய்தார். உடன், கலெக்டர் மகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி உட்பட பலர் இருந்தனர்.
- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !