கருமத்தம்பட்டி அழகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2203 days ago
கருமத்தம்பட்டி:சென்னப்செட்டிபுதூர் அழகர் பெருமாள் கோவில் கும்பாபி ஷேகம் இன்று 30ம் தேதி நடக்கிறது.கருமத்தம்பட்டி அடுத்த பதுவம்பள்ளி ஊராட்சி சென்னப்செட்டிபுதூரில் உள்ள பூமி நீளா நாயகி சமேத அழகர் பெருமாள் கோவில் பழமையானது.கோவிலில் திருப்பணிகள் நடந்தன.
கும்பாபிஷேக விழா நேற்று (அக்., 29ல்) மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து, முதல்கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. இரவு அஷ்டபந்தன மருந்திடப் பட்டது. இன்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.