ஊட்டியில் ஜெபமாலை அன்னை திருவிழா
ADDED :2204 days ago
ஊட்டி:ஊட்டி இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ், பங்குத்தந்தை ஸ்டனீஸ், உதவி பங்குத்தந்தை பிராங்கிளின் ஆகியோர் தலைமையில் ஜெபமாலை ஜெபித்து வழிபட்டு வருகின்றனர்.நாள்தோறும், ஆலயத்தின் ஜெபமாலை உறுப்பினர்கள், கன்னியர்கள் இணைந்து, கிறிஸ்துவர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று, ஜெபமலை அன்னைக்கு பாடல்கள் பாடியும், திருப்பலியும் நிறைவேற்றி வருகின்றனர்.