ஊட்டி குரு பெயர்ச்சி பெருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2204 days ago
ஊட்டி:ஊட்டி காந்தள் காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.அதில், அதிகாலை, 3:49 மணிக்கு, குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு பிரவேசித்து அருள்பாலித்தார். தொடர்ந்து, குருபகவானுக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, தட்சிணாமூர்த்தி மடாலய மடாதிபதி ஞானாநந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், காலை, 8:30 மணிமுதல், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, யாகபூஜை, அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
இதில், தனுசு, மகரம், மீனம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் துலாம் ராசிகளின் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, தட்சிணாமூர்த்தி மடாலய அறங்காவலர் குழு, காசி விஸ்வநாத சுவாமிகள் சேவா சங்கம், ஆலய முன்னேற்ற சங்கம் மற்றும் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.