ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2206 days ago
விழுப்புரம்: வளவனுார் பாலாஜி நகர், திருக்குறிப்பு தொண்டர் நகரில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி திருவிளக்கு, புனிதநீர், பிள்ளையார் வழிபாடும், தொடர்ந்து முதல் கால வேள்வி பூஜை, கருவறை மற்றும் பரிவார சிலைகளுக்கு கோபுரகலசம் அமைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 10:00 மணிக்கு, கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.