உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

கிணத்துக்கடவு சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, காணியாலாம்பாளையத்தில், சித்தி விநாயகர் மற்றும் பல்லடத்து அம்மன் கோவிலில் நேற்று முன் தினம் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு கணபதி, மகாலட்சுமி ஹோமம் நடந்தது.

மாலை 5.00 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத்சங்கரணம், அங்குரார்ப்பணம், கலச அலங்காரம், கலச ஸ்தாபனம், மண்ய அர்ச்சனை, முதற்கால யாக பூஜை நடந்தது. இரவு 10.00 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மஹாயந்திர பிரதிஷ்டை நடந்தது. நேற்று 30ம் தேதி திருப் பள்ளி எழுச்சி, திருவிளக்கு வழிபாடு, கணபதி வழிபாடு நடந்தது. கோவில் மேல் உள்ள கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இதில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !