ஆலாந்துறை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் முப்பெரும் விழா
ADDED :2207 days ago
கோவை : ஆலாந்துறை அங்காள பரமேஸ்வரி அம்மன், தட்சிணா மூர்த்தி, சனீஸ்வர பகவான் கோவிலில் முப்பெரும் விழா நடந்தது.ஆலாந்துறை, நாதகவுண்டன்புதுார் ரோட்டில் உள்ள இக்கோவிலில், 17ம் ஆண்டு உற்சவ திருவிழா, குருபெயர்ச்சி மகா யாகம் மற்றும் 108 சங்கா பிஷேக விழா நடந்தது. குருபெயர்ச்சி அன்று நடந்த இவ்விழாவில், சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.