விருத்தாசலம் கொளஞ்சியப்பருக்கு சந்தன காப்பு அலங்காரம்
ADDED :2209 days ago
விருத்தாசலம்: கந்த சஷ்டியை முன்னிட்டு, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு தினசரி சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்து வருகிறது. அதில், விநாயகர், முருகர் சுவாமிகளுக்கு நேற்று காலை வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.