உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க புதூர் கிளை வரும் 3ல் தொடக்கம்

சேலத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க புதூர் கிளை வரும் 3ல் தொடக்கம்

சேலம்: சேலம் மாவட்ட, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம், பெரியபுதூர், சங்கரா கற்பூர கம்பெனியில், வரும், 3 காலை, 10:00 மணிக்கு, மாவட்ட, அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தலைவர் தியாகராஜன் தலைமையில், புதூர் கிளை தொடக்க விழா, மாவட்ட செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது.

புதூர் கிளை தலைவர் அல்லிமுத்து வரவேற்பார். மாவட்ட செயலாளர் பாலன், சங்க பெயர் பலகையை திறந்து வைப்பார். மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன் மரக்கன்று நடவுள்ளார். புதூர் கிளை செயலாளர் கிருஷ்ணன், விழாவை தொகுத்து வழங்குவார். அதனால், சங்க நிர்வாகி கள், உறுப்பினர்கள், ஐயப்ப பக்தர்கள் பங்கேற்க, விழாக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப் படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !