உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரசேகரர் கோவில் தேர்: 36 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளோட்டம்

சந்திரசேகரர் கோவில் தேர்: 36 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளோட்டம்

ஆரணி: அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகரர் கோவிலில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு, தேர் வெள்ளோட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான  அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகரர் கோவில் உள்ளது. இங்கு, பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும்.  ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடக்கும். கடந்த, 1983ல் தேர் சேதமானதால், அதன் பிறகு தேரோட்டம் நடக்கவில்லை. பக்தர்கள் கோரிக்கையின்படி, அறநிலையத்துறை சார்பில், 33 லட்சம் ரூபாய் மதிப்பில், இலுப்பை மரத்தில், 33 அடி உயரத்தில் தேர் செய்யப்பட்டது. இதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கலெக்டர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 36 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்துக்கு வெள்ளோட்டம் நடந்ததால், பக்தர்கள் ஆர்வத்துடன் இழுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !