விருத்தாசலம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2279 days ago
விருத்தாசலம்:கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் கட்டப்பட்ட விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் விநாயகர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேகம் நேற்று (நவம்., 3ல்) காலை 9:30 மணியளவில் நடந்தது.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., இன்ஸ்பெக் டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், அரசு வழக்கறிஞர் விஜய குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.