உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: வரும் 6ல் முகூர்த்தக்கால்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: வரும் 6ல் முகூர்த்தக்கால்

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வரும் 6ம் தேதி நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருகிற 6ம்தேதி புதன்கிழமை காலை 10 .00 மணிக்கு வைகுந்த ஏகாதேசி முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெறுகிறது.

25 12 .2019 அன்று திருநெடுந்தாண்டகம்
26 12 2019 முதல் 05.01.2020 வரை பகல் பத்து திருவிழா
05.01 2020 அன்று மோகினி அலங்காரம்
0 6 .01. 2020 அன்று  அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறப்பு
12 .01.2020 அன்று திருக்கைத்தல சேவை
13.01 .2020  வேடுபரி வைபவம்
15.01.2020 அன்று ஸ்ரீநம்பெருமாள் தீர்த்தவாரி
16.01.2020 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்சம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !