பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2261 days ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி திருக் கல்யாண உற்சவம் நேற்று (நவம்., 3ல்) நடந்தது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 28ம் தேதி துவங்கியது.
முருகப்பெருமான் வேல் வாங்கும் உற்சவத்தை தொடர்ந்து, சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று முன்தினம் (நவம்., 4ல்) காலை, 10:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவில் வளாகத்தில், முருகப்பெருமான் திருக்கல்யாண கோலத்தில் பல்லக்கில் உலா சென்று அருள்பாலித்தார். பிரசாதமாக, திருமஞ்சள் கயிறு, பக்தர் களுக்கு வழங்கப்பட்டது. திருஊஞ்சல் உற்வச பூர்த்தி நடந்தது.