உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்

பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்

திருப்புத்தூர்:தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.சிவகங்கை, பிள்ளையார்பட்டி, கற்பக விநாயகர் கோவிலில், சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. காலை முதல், விநாயகர், தங்க அங்கியில் காட்சி அளித்தார். கோவில் திருக்குளத்தில் எழுந்தருளிய, அங்குச தேவருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
கோவிலில், நந்தன ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. சந்திர சேகர சுவாமி, கவுரி அம்பாள், ரிஷப வாகனத்திலும், விநாயகர், மூஷிக வாகனத்திலும் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !