உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயனார், முனியப்பர் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

ஐயனார், முனியப்பர் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து இரு உண்டியல்களில் இருந்த பக்தர்களின் காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகளை திருடி சென்றுள்ளனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் முனியப்பர் கோவில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை பக்தர்கள் கோவிலுக்கு சென்றபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, மர்ம ஆசாமிகள் கோவில் வளாகத்தில் இருந்த மின் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தி சூலாயுதத்தால் கோயில் கதவு பூட்டை உடைத்துள்ளது தெரியவந்தது. பின்னர் கோவிலுக்குள் இருந்த இரு உண்டியல்களை உடைத்து அதிலிருந்த ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்களின் காணிக்கை பணத்தை ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !