உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல்லில் குரு பெயர்ச்சி யாகம்

நாமக்கல்லில் குரு பெயர்ச்சி யாகம்

நாமக்கல்: நாமக்கல் - துறையூர் சாலையில் உள்ள, சித்தி விநாயகர் சன்னிதானம் சார்பில், கொசவம்பட்டி நான்கு ரோடு அருகே, குருபெயர்ச்சி மகா யாகவிழா நடந்தது. சங்கரய்யர் தலைமையேற்று நடத்தி வைத்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு தீபதிருவிளக்கு பூஜை, விசஷே பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது, நேற்று காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், 9:00 மணிக்கு குரு மஹா யாகம், பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தது. பல்வேறு ராசிக்காரர்கள் யாக பூஜையில் பங்கேற்று பரிகாரம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !