கோயில் நிலம் பட்டா: எதிர்ப்பு வலுக்கிறது
ADDED :2177 days ago
மதுரை: தமிழக கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க அரசு திட்டமிட்டுள்ளதற்கு ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட நிர்வாகி கிருஷ்ணா கூறியதாவது: கோயில் சொத்துக்களை விற்க ஹிந்து ஆலய பாதுகாப்பு சட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பக்தர்கள் கோயில்களுக்கு தானமாக வழங்கிய கட்டளை சொத்துக்களை சட்டத்துக்கு புறம்பாக பட்டா வழங்கினால் முன்னோரின் ஆன்மா மன்னிக்காது. கோயில் இடங்களில் மாற்று மதத்தவர்கள் அரசியல் கட்சியினரின் ஆதரவுடன் பலர் ஆக்கிரமித்து வருகின்றனர். அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனரிடம் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.