சென்னிமலை மாரியம்மன் பொங்கல் விழா: 200 ஆடு, 500 கோழிகள் பலி
ADDED :2174 days ago
சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.
சென்னிமலையில், காங்கேயம் பிரதான சாலையில் உள்ள, மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 23ல் பூச்சாட்டுடன் தொடங்கியது. 30ல் கம்பம் நடப்பட்டது. இதையடுத்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் இரவில், அம்மன் வீதியுலா நடந்தது. விழா முக்கிய நிகழ்வான, பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணி முதலே, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள், பொங்கல் வைக்க தொடங்கினர். விழாவில், 200 ஆடுகள், 500 கோழிகள் பலியிடப்பட்டன. மாலையில் அலகு குத்தியும், மாறுவேடமிட்டும் பக்தர்கள் ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். மஞ்சள் நீராட்டத்துடன், விழா இன்று நிறைவடைகிறது.