இடைப்பாடி செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2164 days ago
இடைப்பாடி: கொங்கணாபுரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 12 கிராம மக்கள் வழிபடும், கச்சுப்பள்ளி செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 29ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று (நவம்., 8ல்) மாலை, தேரோட்டம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து, முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் கோவிலை அடைந்தனர். அப்போது, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.