உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு

கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகில், கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி பேராசிரியர் பிரபு கூறியதாவது: வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே,  கொடையாஞ்சியில் உள்ள நிலத்தில், சலவைக்கு பயன்படுத்தி வந்த ஒரு கல் இருந்தது. இந்த கல்லில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு எனத்தெரிந்தது. அதில், இந்த  நிலத்தை 1,000 பொன் கொடுத்து வாங்கி, அங்கிருந்த காசி விசுவநாதர் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்ததை அறிய முடிந்தது. அந்த கல்வெட்டில் நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோல, பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுவதால், இப்பகுதியில்  பல கோவில்கள் இருந்துள்ளன என்பது தெரிய வருகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !