விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :2492 days ago
திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் அமைந்துள்ளது. இது தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகும். இக்கோயிலில் ஐப்பசி அசுவினி நட்சத்திரம் மற்றும், பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் சிறப்பான முறையில் நடந்தது. சந்திர சேகர சிவாச்சாரியார் இந்த அபிஷேகத்தை நடத்தினார். இந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.