மேலகரத்தில் திருவிளக்கு பூஜை!
ADDED :4974 days ago
குற்றாலம்:மேலகரத்தில் சத்குரு ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் சபை சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.உலக அமைதிக்காகவும், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெறவும் தென்காசி மேலகரம் ஸ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி பக்தர்கள் சபை சார்பில் திரிகூட மகாராஜ கவிராயர் திருமண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை மற்றும் சத்சங்கம், தியானம், பஜனை ஆகியன நடந்தது. கொல்லம் மாவட்டம் அமிர்தபுரி மாதா அமிர்தானந்தமயி ஆஸ்ரமம் துறவியும், சீடருமான அஜாம்ருத சைதன்யா தலைமை வகித்தார்.திருவிளக்கு பூஜை மற்றும் பஜனை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேலகரம் சத்குரு ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி தேவி பக்தர்கள் சபையினர் செய்திருந்தனர்.