அருணாப்பேரி கோயில் கொடை விழா!
ADDED :4925 days ago
பாவூர்சத்திரம்:அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் கொடைவிழா 3 நாட்கள் நடந்தது.அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் கொடைவிழா நாட்களில் அம்மனுக்கு முக்கால சிறப்பு பூஜை நடந்தது. வில்லிசை, மேளம் நடந்தது. 2ம் நாள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 3ம் நாள் காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. மதியம் பெண்கள் பொங்கல் செய்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா சிவனுபாண்டி செய்திருந்தார்.