மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
2127 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
2127 days ago
வெயில் காலத்தில் கோடை வாச ஸ்தலங்களுக்கு போவது மகிழ்ச்சியைத் தரும். அங்கே இயற்கையைக் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் நம் கவலைகள் மறக்கும். நியூசிலாந்து நாட்டில் குவின்ஸ் என்றொரு நகரம் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த நகரத்தில் வித்தியாசமான அறிவிப்பு பலகையைக் காணலாம். ""குவின்ஸ் டவுன் உங்களை வரவேற்கிறது. நீங்கள் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி மேலே இருக்கிறீர்கள்” என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்த சுற்றுலா தலத்திற்கு வந்தால் கவலைகள் மறந்து சந்தோஷம் உண்டாகும் என்னும் அடிப்படையில் இது உள்ளது. மலையை விட்டு இறங்கியதும் மீண்டும் வழக்கமான பணிகளில் ஈடுபடுவோம். மீண்டும் கவலை தொற்றிக் கொள்ளும். ஆனால், நிரந்தரமாக கவலைப்படாமல் இருக்க என்ன வழி? ""உங்கள் கவலைகளை எல்லாம் ஆண்டவர் மீது வைத்து விடுங்கள்”. எங்கிருந்தாலும் நாம் கவலை இல்லாமல் வாழ முடியும்.
2127 days ago
2127 days ago