உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜை

திண்டுக்கல் கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜை

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. முன்னதாக, யாகபூஜை, அன்னாபிஷேகம் நடந்தது.

* வடமதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. உலக நலன் வேண்டியும், கோயில் திருப்பணி நடைபெற வேண்டி திருவடியார் கூட்டம் சார்பில் திருவாசக முற்றோதல் நடந்தது.

* கன்னிவாடி: சோமலிங்கசுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.  விநாயகர், மூலவர், நந்திக்கு வேதி தீர்த்த அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு  அன்னாபிஷேகம், காய் கனிகளால் அலங்காரம் நடந்தது. சித்தர் குகையில்  அன்னபூரணிக்கு அன்னக்காப்பு, சிறப்பு பூஜை நடந்தது.இதே போல் கசவனம்பட்டி  மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்கசுவாமி, குட்டத்துப்பட்டி ஆதிதிருமூல நாதர், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது.

* பட்டிவீரன்பட்டி: சுயம்பு நாகேஸ்வரி அம்மன் ஜோதிகாம்பிகை உடனுறை  ஜோதிலிங்கேஸ் வரர் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம், சிறப்பு  அலங்காரம், பூஜைகள் நடந்தன.

* சாணார்பட்டி: காம்பார்பட்டி ஆத்ம லிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகை அபிஷே கம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் சிம்மபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

* கிருஷ்ணராயபுரம்: கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், கிருஷ்ணராயபுரம் அருகே,  கருப்பத் தூரில் பழமையான சிம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஐப்பசி மாத  பவுர்ணமியை முன்னி ட்டு, இக்கோவிலில் சுவாமிக்கு, அன்னாபிஷேகம் செய்து,  சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், கருப்பத்தூர் சுற்று வட்டார பகுதி  மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

* இதேபோல் லாலாப்பேட்டை செம்பொற்ஜோதீஸ்வரர் கோவில்,  பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோவில்களில், சுவாமிக்கு  அன்னாபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !