உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் அன்னாபிஷேகம்

புத்தேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் அன்னாபிஷேகம்

பெண்ணாடம்:ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பெண்ணாடம் அடுத்த  புத்தேரி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் சந்திர  மவுலீஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷே கம் வெகு விமர்சையாக நடந்தது.

இதையொட்டி, நேற்று (நவம்., 12ல்) காலை 8:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தாயார் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அன்னம் சாற்றி, காய்கறிகள் மற்றும் பழங்களால் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டது. இரவு 7:00 மணியளவில் சிவபுராணம், வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை  நடந்தது.இரவு 8:30 மணியளவில் அன்ன அலங்காரம் களையப்பட்டு அர்த்தசாம  பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சமபந்தி  போஜனம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர்கள் மற்றும் கிராம  வாசிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !