கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு
ADDED :2173 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ நிறைவு விழா நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருப் பவித்ரோற்சவம் 6 நாட்கள் நடந்தது. உலக நலன் வேண்டி நடந்த உற்சவம் கடந்த 7ம் தேதி மாலை துவங்கியது. 8ம் தேதி காலை பெருமாள், தாயார் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தல், அக்னி பிரதிஷ்டை, கலசஸ்தாபனம், பெருமாளுக்கு பவித்ர மாலை சமர்ப்பித்தல், யாக சாலை பிரதான ஹோமம், பூர்ணாகுதி, சாற்றுமுறை நடந்தது. தொடர்ந்து 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை யாகம் மற்றும் பூஜை நடந்தது.நிறைவு விழா நாளான நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை, பசுபூஜை நடந்தது. பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளுதல் பூஜை நடத்தப்பட்டு, அட்சதை ஆசீர்வாதம், பிரம்ம கோஷம், சாற்றுமுறைக்கு செய்து திருப்பவித்ரோற்சவ வழிபாட்டினை நிறைவு செய்தனர்.