குளித்தலை அருகே அய்யர்மலையில் பவுர்ணமி கிரிவலம்
ADDED :2185 days ago
குளித்தலை: குளித்தலை அருகே, அய்யர்மலையில் நேற்று (நவம்., 12ல்) நடந்த பவுர்ணமி கிரிவலத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குளித்தலை அடுத்த, அய்யர் மலை யில், ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று, சுற்றுவட் டார கிராம மக்கள், கையில் ஊதுபத்தி ஏந்தியவாறு கிரிவலம் வருவர். அதன்படி, பவுர்ணமியான நேற்று (நவம்., 12ல்) கிரிவலம் நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், குளித்தலை யில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.