ஈரோடு கபாலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா
ADDED :2186 days ago
ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், மகிமாலீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேக விழா, நேற்று (நவம்., 12ல்) நடந்தது. இதையொட்டி, 100 கிலோ அரிசியில் வடிக்கப்பட்ட அன்ன த்தை கொண்டு, அன்னாபிஷேகம் நடந்தது. காலை, ஜோதிலிங்க வழிபாடுடன் தொடங்கி மாலை யில், அன்னாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அபிஷேக அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
* சென்னிமலையை அடுத்த முருங்கத் தொழுவில், பிரமன் பூஜித்த தலமான பிரமலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த, அன்னாபிஷேக விழாவில், கைலாசநாதர் திருமேனிக்கு, 25 கிலோ அரிசியால் வடித்த சாதம், 20 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.