ஸ்ரீவி., பெரியபெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்
ADDED :2266 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. இதனை முன்னிட்டு கோயில் பிரகாரம் சுற்றி வந்து, ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பெரியபெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளினார். அங்கு ராஜாபட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் வேதபாராயண கோஷ்டி நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கோயில் பட்டர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.