உள்ளூர் செய்திகள்

பணிவுக்கு...

சிவன் கோயிலில் உள்ள நந்தி முன்னுள்ள காலை சற்றே மடக்கியும், மற்றொரு காலை நீட்டியபடியும் காட்சி தரும். இரு கால்களை மடக்கியபடி பணிவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நந்தி எங்குள்ளார் தெரியுமா... திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 25 கி.மீ., தொலைவில் உள்ளது குணசீலம். இங்குள்ள சிவபெருமானின் பெயர் தார்மீகநாதர். அம்மன் ஹேமவர்ணேஸ்வரி. இங்குள்ள சுவாமி, அம்மன், நந்தியை தரிசித்தால் பணிவும், பொறுப்பும் ஏற்படும்.