புகழ்ந்து பாடினர்
UPDATED : பிப் 13, 2025 | ADDED : பிப் 13, 2025
பெருமாளின் அடியார்களை ஆழ்வார்கள் என்பர். இவர்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரையும் 'முதலாழ்வார்' என அழைப்பர். ஐப்பசி மாதத்தில் திருவோணம், அவிட்டம், சதயத்தில் இவர்கள் பிறந்தனர். இந்த மூவரும் ஒருநாள் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் உள்ள ஒரு வீட்டுத்திண்ணையில் சந்தித்தனர். அப்போது அந்த மூவரும் பெருமாளை புகழ்ந்து பாடிய பாடல்களே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதியாகும். வையம் தகளியா வார்கடலே நெய்யாகவெய்ய கதிரோன் விளக்காகச் - செய்யசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலைஇடர்ஆழி நீங்குகவே என்று.