ராமசரித மானஸ்
UPDATED : ஏப் 17, 2025 | ADDED : ஏப் 17, 2025
ராமர் அவதரித்த அயோத்திக்கு யாத்திரை புறப்பட்டார் துளசிதாசர். வழியில் களைப்பாற ஆலமர நிழலில் ஒதுங்கினார். அங்கே துறவியர் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், ''வால்மீகி ராமாயணத்திற்கு இணையான காவியம் வேறில்லை'' என்றார். மற்றொருவர், ''உண்மை தான்! ஆனால் பண்டிதர்கள் மட்டுமே அதை படிக்க முடியும். பாமரர்களால் அதை புரிந்து கொள்ள முடியாதே'' என வருந்தினார். இதைக் கேட்ட துளசிதாசர் மனதில், 'ராம காவியத்தை எளிய நடையில் இயற்றும் முயற்சியில் ஈடுபட்டால் என்ன?'' என்ற எண்ணம் தோன்றியது. அதற்கான முயற்சியில் உடனடியாக ஈடுபட்டார். ஹிந்தியில் மொழிபெயர்த்து 'ராமசரித மானஸ்' என்னும் பெயரில் ராமாயணம் எழுதினார். இதன் எளிய நடையால் ராம காவியம் நாடெங்கும் பரவியது.