வேத நாயகன்
UPDATED : மே 23, 2025 | ADDED : மே 23, 2025
திருப்பூந்துருத்தியில் மடம் நிறுவி உழவாரப் பணியில் ஈடுபட்டார் திருநாவுக்கரசர். அங்கு அவர் பாடிய பதிகத்தில் ஆதி நாயகன், தேவதேவன், ஈறு இல்லாதவன், மாதேவன் என சிவபெருமானின் முதன்மைத் தன்மையை போற்றியுள்ளார். ஆதிபுராணக் குறுந்தொகை எனப்படும் இப்பதிகத்தில், வேத நாயகன் வேதியர் நாயகன்மாதின் நாயகன் மாதவர் நாயகன்ஆதி நாயகன் ஆதிரை நாயகன்பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே எனப் பாடியுள்ளார். வேதத்தின் தலைவனே. வேதம் ஓதுபவர்களின் முதல்வனே. பார்வதி தேவியின் கணவனே. தவம் செய்யும் அடியவர்களுக்கு அருள்பவனே. அனைத்து செயல்களுக்கும் காரணமானவனே. திருவாதிரை நாளுக்கு உரியவனே. ஐம்பூதங்களை இயக்கும் நாயகனே. புண்ணிய மூர்த்தியே. சிவபெருமானே. எங்களுக்கு அருள்புரிவாயாக!