திருக்கார்த்திகை நாயன்மார்
UPDATED : நவ 27, 2025 | ADDED : நவ 27, 2025
சிவபக்தர் ஒருவர் 'கணம்புல்' என்னும் புல்லை விற்றுக் கிடைத்த பணத்தில் கோயில்களில் விளக்கேற்றி வந்தார். ஒருநாள் புல் விற்கவில்லை. இருந்தாலும் அந்த புல்லினால் விளக்கேற்றினார். புல்லால் ஆன திரி சீக்கிரம் அணையுமே என வருந்தி, தன் தலை முடியை திரியாக்கி விளக்காக எரிக்க முயன்றார். அவரை சோதிக்க விரும்பாமல் சிவன் நேரில் காட்சியளித்து சிவலோகத்தில் வாழும் வரத்தை அளித்தார். கணம்புல்லர் எனப்பட்ட இவர் நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கான குருபூஜை சிவன் கோயில்களில் திருக்கார்த்திகை அன்று நடக்கும்.