பைரவ பக்தர்
UPDATED : டிச 02, 2022 | ADDED : டிச 02, 2022
திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரியில் வாழ்ந்தவர் ராமலிங்கர். இவர் பைரவ பக்தர். வடலுார் வள்ளலார் கொள்கைகளை பின்பற்றியவர். காஞ்சி மஹாபெரியவரோடு தொடர்புடையவர். கழுத்தில் உண்டியல் கட்டிக் கொண்டு நிதி திரட்டியவர். அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு யாரும் திருப்பணி செய்ய முன்வராத பழுதடைந்த கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தியவர். அன்னதானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர். சென்னை திருவெற்றியூர் பட்டினத்தார் கோயிலுக்கு அருகில் இவருடைய கோயில் உள்ளது.