அழகை வர்ணிக்கும் நூல்!
UPDATED : அக் 13, 2015 | ADDED : அக் 13, 2015
கைலாசம் சென்ற சங்கரருக்கு, பார்வதி மந்திர சுவடி ஒன்றைக் தந்தாள். அதில் தேவியின் அழகை வர்ணிக்கும் 100 ஸ்லோகம் இருந்தன. கைலாசத்திலேயே அது இருக்க விரும்பிய நந்தி, சங்கரரிடம் இருந்து சுவடியைப் பறித்தார். அப்போது பாதிக்கு மேல் (59 ஸ்லோகம்) நந்தி வசம் வந்தது. மீதி 41 ஸ்லோகம் மட்டுமே சங்கரர் கையில் இருந்தது. அப்போது பார்வதி, ''கவலைப்படாதே. தவற விட்ட அந்த ஸ்லோகங்களை நீயே பூர்த்தி செய். அதற்காகவே இந்த நாடகத்தை நந்தி மூலம் நடத்தினேன்,'' என்றாள். அதன்படி சங்கரரும் 'சவுந்தர்ய லஹரி'யை முழுமையாக பாடினார்.