மாலை நேரத்து மயக்கம்
UPDATED : ஜூலை 31, 2021 | ADDED : ஜூலை 31, 2021
ஓராண்டு என்பது தேவலோகத்தில் ஒரு நாளாகும். இதில் தை முதல் ஆனி வரை பகலாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவாகவும் இருக்கும். இதையே உத்ராயணம் தட்சிணாயனம் என்று சொல்வர். ஆடி மாதத்தில் தொடங்கும் இருட்டு மார்கழி வரை தொடரும். மாலை நேரத்தின் தொடக்கமாக ஆடி உள்ளது. பகல் முடிந்து இருள் சூழும் மாலையில் மயக்கம் ஏற்படுவது இயல்பு. அதிலிருந்து காக்கும்படி பராசக்தியை தேவர்கள் வழிபடுவர். இதனடிப்படையில் பூலோகத்திலும் அம்பிகை வழிபாடு ஆடியில் நடக்கிறது.