முதல் மதிப்பெண் பெற...
UPDATED : அக் 04, 2022 | ADDED : அக் 04, 2022
துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த சண்முகசிகா மணிக்கவிராயருக்கு மகனாக பிறந்தவர் குமரகுருபரர். இவர் பிறந்து ஐந்துஆண்டுகள் வரை பேசாமல் இருந்தார். பின்னர், திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றார். இவர் இயற்றிய நுால்களுள் ஒன்று சகலகலாவல்லி மாலை. இதில் உள்ள பத்து பாடல்களும் சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தவை. குழந்தைகள் நன்கு படிப்பில் சிறந்து விளங்க விரும்பும் பெற்றோர்கள் இதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். இதனைப் படிக்க படிக்க முதல் மதிப்பெண் பெறுவது உறுதி.