உலக நாயகனே!
UPDATED : ஜன 15, 2013 | ADDED : ஜன 15, 2013
சூரியபகவானே லோக நாயகனான முழு முதற்கடவுள் என்று சூரியபுராணம் குறிப்பிடுகிறது. சிவனுக்கு கைலாயம், நாராயணனுக்கு வைகுண்டம், பிரம்மாவுக்கு சத்தியலோகம் போல, சூரியனுக்குரியது சூரியலோகம். பிங்களன், தண்டநாயகன் என்ற துவார பாலகர்கள் இந்த லோகத்தைக் காவல் செய்கின்றனர். அருணன் சூரியனின் சாரதியாக இருக்கிறார். ஏழுகுதிரைகள் பூட்டப்பட்ட அத்தேருக்கு ஒற்றைச் சக்கரம் தான் இருக்கிறது. சூரியனின் மனைவியராக உஷா, பிரத்யுஷா உள்ளனர். இவர் ஆயிரம் முகங்கள் (கிரணங்கள்) கொண்டவராக கிழக்குத்திசையில் உதிக்கிறார்.